Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு வேலைக்காக…. காத்திருப்போர் பட்டியல்…. ஒரே ஆண்டில் 6 லட்சமாக உயர்வு…!!!

தமிழ்நாட்டை பொருத்தவரை அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலைக்கான பணி வழங்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் ஏராளமானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது கொரோனா சூழல் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது. வேலையின்மையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் விவரங்களை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 7030345 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர மாற்றுத்திறனாளிகள் 137077 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |