தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து 76,24,726 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 35,63,672 ஆண்கள், 40,60,817 பெண்கள், 237 மூன்றாம் பாலினத்தவர் மேலும் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 16,73,803 பேர் பதிவு செய்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Categories