தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று 17 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை,தர்மபுரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்.
மழையின்போது மின் மாற்றிகள், மின்கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே யாரும் செல்ல வேண்டாம். உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு கீழ் மற்றும் அருகில் நின்ற செல்போன் பேசக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.