தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் அழகு நிலையங்கள், சலூன்கள், கேளிக்கை பூங்காக்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.