நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலில் இருக்கும் என இரண்டு தினங்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற விஷயத்தை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி – செங்கல்பட்டு, விழுப்புரம் – அரக்கோணம் – கோவை, கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.