Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகள்…. 4 மடங்கு அதிகரிப்பு…. அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி வரை மொத்தம் 8,340 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் 366 பேர் கொரோனா நோயாளி ஐசியூவில் இருந்தனர். ஜனவரி 17-ஆம் தேதியன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 1,52,348 ஆக உயர்ந்துள்ளது. இதில் 814 பேர் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது தமிழகத்தில் உள்ள 9,829 ஐசியூ படுக்கைகளில் 8.2 சதவீதம் படுக்கைகள் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். 290 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர். கோவையில் 72 பேர், சேலத்தில் 68 பேர், வேலூரில் 51 பேர் மதுரையில் 49 பேர் இருக்கின்றனர். அதேபோன்று ஜனவரி 1-ஆம் தேதி தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 1,392 ஆக இருந்தது. ஜனவரி 17-ஆம் தேதி கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்து 4,013 பேர் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது தமிழகத்தில் உள்ள 40,757 ஆக்சிஜன் படுக்கைகள் 9.8 சதவீதம் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. அதில் குறிப்பாக சென்னையில் 1,407 பேர், கோவையில் 499 பேர், மதுரையில் 296 பேர், வேலூரில் 193 பேர், சேலத்தில் 149 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |