தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். விப்ரோவின் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்று தமிழகத்திலும் ஏற்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.