அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் திருத்தம் செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதில் தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதலில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற விரும்பினால் தற்போது அவர்கள் பணிபுரியும் பள்ளியில் ஓராண்டை கடந்த பின்புதான் இடமாறுதல் அளிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories