தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வரும்10 தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும்10 தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் காரணத்தால் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.