Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ரத்து?…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி உயர்வு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இணைய வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சியின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப பதவி உயர்வு கலந்தாய்வு வருகின்ற ஜூலை 11 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி அரசு நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வருகின்ற ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகிறது.

அதனைப் போலவே நகராட்சி,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 12ஆம் தேதியும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 14 மற்றும் 15ஆம் தேதியும் நடைபெறும். இருந்தாலும் தற்போது அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |