தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக கட்சி இருக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பாதிக்கப்பட்டு வரும் தமிழக மக்களுக்கு விடிவு ஏற்படுகிற வகையில் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் உழைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.