தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இன்று நடந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. திமுக அணிக்கு 158 முதல் 166 இடங்கள் கிடைக்கும். அதிமுக அணிக்கு 60 முதல் 68 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மக்கள் நீதி மையம் கட்சிக்கு 0 முதல் 5, அமமுக 2 முதல் 6, இதர கட்சிகள் 0 முதல் 4 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.