தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் நெருங்கிவிட்டாலே தேர்தல் குறித்த கருத்துகணிப்பு வரத் தொடங்கிவிடும். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று டைம்ஸ் நவ் மற்றும் சிஓட்டர்ஸ் இரண்டும் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தி தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது வெளியாகிய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொருத்தவரை 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 158 இடங்களையும், அதிமுக 65 இடங்களில் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் நீதி மையம் 5, அமமுக-3, இதர கட்சிகள் மூன்று இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.