தமிழகத்தில் ஆட்சியமைக்க மு.கஸ்டாலினை ஆளுநர் பன்வாரிலால் மே 7-ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும் திமுக எம்எல்ஏ கூட்டத்திலும் சட்டப்பேரவைக் குழு தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புதிய திமுக அமைச்சர்கள் பட்டியலையும் அவர் வழங்கினார். அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணி அளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.