Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ? பாஜக போட்ட புது குண்டு… ஷாக்கில் ஆளும் தரப்பு ..!!

அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கட்சி வேண்டாம், பாரதிய ஜனதா கட்சி வேண்டாம், இந்துமத வேண்டாம், கிறிஸ்துவ மதம் வேண்டாம்.. மதம் என்ன சொல்லுது ? கிறிஸ்தவ மதம் என்ன சொன்னது ? லவ்வு இஸ் ஜீசஸ்,  அன்பு.இந்து மதம் என்ன சொன்னது ? அன்பே சிவம். இஸ்லாம் மதம் என்ன சொல்லுது ? கருணை வடிவானவர் அல்லாஹ், அருள் வடிவானவர் அல்லாஹ்.

எல்லா மதமும் அன்பை தானே சொல்லுது. அந்த குறைந்தபட்ச அன்பு  தஞ்சாவூர் எஸ்.பிக்கு இல்லையா ? நீங்கள் ஒரு பெண்ணா ? இல்லை பேய்யா ? பேய்  என்றால் பெண்ணும் இறங்கும் என்று சொல்வார்கள். ஆனால் தஞ்சாவூர் எஸ்.பி காக்கி சட்டை போட்ட ஐபிஎஸ். திமுக ஆட்சி நாளைக்கு நான்கு வருடமோ அல்லது  நாலு வருஷம் சுருங்கி அது மூணு வருஷமோ, மூணு வருஷம் சுருங்கி ரெண்டு வருஷமோ… ஆனால் ஆட்சி மாற்றம் என்பது உறுதி. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

என்னைப் பொறுத்த வரையிலும் நான் கொஞ்சம் அமைதியான ஆள். ஆனால் சில விஷயங்களில் ரொம்ப கடுமையா இருப்பேன். இதே எஸ்பியை நான் மனசில் வைத்துக் கொண்டே இருப்பேன். ஆட்சி மாற்றம் வந்த பிறகு, உங்களுக்கெல்லாம் என்ன மருந்து என்று எங்களுக்கு தெரியும் ? போலீஸ் என்றால் பெரிய வித்தை காட்டக்கூடியவர்கள், பயப்படக்கூடிய ஆளு இல்ல.

அண்ணாமலை பார்க்காத பதவியா ? மனசாட்சி வேண்டும். நான் மிரட்டுவதாகவும், கைதட்டனும்,  பொழுதுபோக்கிற்காக நான் பேசவில்லை. ஊடகங்களும்,  பத்திரிகையாளர்களும் அந்த மாதிரி எழுத வேண்டிய அவசியம் கிடையாது. லாவண்யா என்ன தப்பு பண்ணிச்சு அந்த குழந்தை ? 15 வயசு குழந்தை.  அவருடைய வாழ்க்கை பருவம்  ஆரம்பிக்க வேண்டிய வயசிலேயே வாழ்க்கையே முடிஞ்சு போச்சு.

சிந்திக்க வேண்டாமா ?  உணர்வு வேண்டாமா இந்த தஞ்சாவூர் எஸ்பிக்கு.   அல்ல மேல் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு உங்க வீட்ல குடும்பத்தில் பெண்கள் இல்லையா ? வாரிசே இல்லையா ? லாவண்யா பாவம் அது சாவமாக மாறும், ஆட்சி மாறும் என தெரிவித்தார்.

Categories

Tech |