தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சமாக 50 ரூபாய் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில், தமிழக அரசு போக்குவரத்து இணை ஆணையர் தலைமையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணய குழு அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டது. கடந்த 12ஆம் தேதி இந்த குழு ஆட்டோ சங்கர் பிரதிநிதிகளின் கூட்டத்தை கூட்டியது.
அந்தக் கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் மற்றும் மேலும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 25 ரூபாய் என நிர்ணயித்து அரசை வலியுறுத்தினோம். இந்த கருத்தை கேட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . ஆனால் புதிய மீட்டர் கட்டணம் குறித்து அரசுத் தரப்பிலிருந்து அரசு ஆணை வெளியிடப் படவில்லை. எனவே தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டு ஆட்டோ தொழில் மற்றும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு சார்பாக உரிய முறையில் ஆட்டோக்களுக்கு செயலி தொடங்க வேண்டும். இலவச ஜிபிஆர்எஸ் மீட்டர் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.