தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலே வாக்காளர் பட்டியல் ஆகும். வாக்காளர் பட்டியல் நீதிமன்றத் தொகுதிவாரியாகத் தயாரிக்கப்படும். தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என நிர்ணயித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வாக்காளர் இறுதிப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை -6,36,25,813. இதில் ஆண்கள்- 3,12,26,719 பேர். பெண்கள் 3,23,91,250 பேர். திருநங்கைகள் – 7,804 பேர். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். 18-19 வயதுள்ள வாக்காளர்கள் 4,32,600 பேர்.
மேலும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 7,11,755 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள்- 3,56,239 பேர். பெண்கள் – 3,55,394 பேர். மூன்றாம் பாலினத்தவர் 122 பேர். மிகக் குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதி கீழ்வேளூர். இந்த தொகுதியில் ஆண்கள்- 86,893 பேர். பெண்கள் – 91,613 பேர். மூன்றாம் பாலினத்தவர் -11 .