தற்போது தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பலர் சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடை செய்வதற்காக 19- ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும். இந்நிலையில் இந்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டத் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதம் சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இல்லையென்றால் இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும்.
மேலும் இதனை நடத்துபவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும். மேலும் இதனை கண்காணிப்பதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.