தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. பலரும் ஆன்லைன் ரம்மி யை தடை செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி க்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க குழு ஒன்றை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான இந்தக் குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் மற்றும் காவல் துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆன்லைன் ரம்மி யால் ஏற்படும் பாதிப்புகளை இந்த குழு ஆராய்ந்து அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி க்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த புதிய உத்தரவு மக்கள் மத்தியிலும் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.