Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை…. 15 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு மரணம்…. பெரும் அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை போரூர் சேர்ந்த பிரபு என்ற 39 வயது மிக்க நபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு வருடமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலையை இழந்து வீட்டிலேயே இருந்தார். இவரின் மனைவி ஜனனியும் தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த ஜனனி படுக்கையறையில் பிரபு தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனே போலீசுக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பிரபு ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தது தெரிய வந்தது. தன்னிடமிருந்த கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த பிரபு 15 லட்சம் வரை அதில் இழந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து கடனை அடைக்க வங்கி நிர்வாகம் பிரபுவுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார்.

Categories

Tech |