Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு…. அமைச்சர் கடும் எச்சரிக்கை…!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனையை போக்குவரத்து துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 16 ஆயிரத்து 768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |