அக்டோபர் மாதத்தில் பண்டிகை தினம் என்பதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என்றும், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கவில்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்