தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டண விகிதங்களை போக்குவரத்து துறை அமைச்சரிடம் வழங்கினர். இதில் தற்போது இருப்பதை விட 10-22% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை – கோவை 1,815 – 3025, சென்னை – மதுரை 1,776 – 2,688, சென்னை – நெல்லை 2063-3437 , வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.