தமிழகத்தில் ஆரஞ்சு பால் பாக்கெட்டை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் ஆரஞ்சு பால் பாக்கெட் 500 மில்லி 24 ரூபாய்க்கும்,பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும் மற்றும் நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை ஆவின் நிறுவனம் உயர்த்திய நிலையில் ஆவின் ஆரஞ்சு பால் விற்பனை விலை ஒரு லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சிவப்பு நிற டிமேட் பால் பாக்கெட் விளையும் லிட்டருக்கு எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் 500 மில்லி டீமேட் பால் 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.