இந்திய மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கீழ் 47வது ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேனா மை துவக்கி முதல ஹோட்டல் வாடகை வரைக்கும் உள்ள பல்வேறு சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டது. அதிலும் LED விளக்குகள், மின்விளக்குகள், கத்தி பிளேடு போன்ற பொருட்கள் மீதான வரை 18% ஆக அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் பாக்கெட்டுகளில் அனைத்து விற்பனை செய்யக்கூடிய அரிசி, பருப்பு, தயிர், லஸ்ஸி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரி நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதாவது மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு அரிசின் மீது 5% ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் போராடும் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலை உரிமையாளர் சங்கம் கூறியது, “தமிழகத்தில் அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி ஜூலை 16ஆம் தேதி அன்று அரிசி ஆலைகள் சங்க சார்பில் போராட்டம் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரி குறைக்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நீடிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அரிசி ஆலை ஊழியர்கள், வணிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.