அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.