Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் வெளியில் செல்வதற்கு மிகவும் தயங்கினார்கள். இதற்கு மத்தியில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தற்போது கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தென்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே இரண்டாம் தேதி மட்டும் வங்க கடலோரப் பகுதிகளில் கடலில் அலைகளின் சீற்றம் அதிகரிக்கும். மே 3 முதல் 5 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |