Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், குமரி மற்றும் புதுவையில் இடி மின்னலுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு மன்னார் வளைகுடா மற்றும் வங்கக்கடலில் தெற்கு மத்திய பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது

Categories

Tech |