தமிழகத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் காலியாக இருக்கின்ற திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை தற்போது கிடையாது. அதுமட்டுமன்றி அசாம்,கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் காலியாக இருக்கின்றதே தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சட்டமன்ற தொகுதிகளில் காலி இடங்கள் அறிவிக்கப்பட்ட ஆறுமாதத்தில் நடத்தக்கூடிய நிலையில் தேர்தல் ஆணையம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.இடைத்தேர்தல் நடத்தப்படும் அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என பல மாநில தலைமைச் செயலர்கள் கடிதம் எழுதி இருக்கின்ற நிலையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளது.