Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைநின்ற 1.28 லட்சம் மாணவர்கள்…. மீண்டும் பள்ளியில் சேர்ப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்து வரும் நிலையில், கொரோனா காலத்தில் வழக்கத்தை விட இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடன் 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 15 முதல் 30 நாட்கள் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டது. அதில் இரண்டு லட்சம் மாணவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இடை நிற்றலை தடுத்திடும் வகையில் இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணியில் 40 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் இந்தப் பணியில் மாநிலம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு மாணவர்களை கண்டறிந்து பெற்றோர்களிடம் கலந்து ஆலோசித்து 1,28,581 மாணவ மாணவியர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள மாணவர்களை கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.

Categories

Tech |