Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் கொடுங்க!…. அரசுக்கு சீமான் வலியுறுத்தல்….!!!!!

அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்தை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் தி.மு.க அரசு ஏமாற்றி வருவது ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கிற பச்சை துரோகம் ஆகும்.

எனவே நாட்டின் வருங்காலத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய பாகுபாட்டைக் களைந்து உடனே அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.

Categories

Tech |