Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லை… மக்களே நிம்மதியா இருங்க…!!!

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து கேரளாவின் ஆலப்புழா பகுதியிலிருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்டவை தமிழகம் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி கேரள மற்றும் தமிழகம் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரள மாநில எல்லையோரம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவும் வாய்ப்பு மிகக்குறைவு என்பதால் வீன் அச்சம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |