தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1,000-ஐ நெருங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதிதாக 890 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 27,46,890 ஆக அதிகரித்துள்ளது. இன்று 608 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,03,196 ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,765 ஆகவும் அதிகரித்துள்ளது.