2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் குறுவை சாகுபடி 4 லட்சம் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்றது. நெல் சாகுபடி மொத்த அளவு 53. 56 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.150 கோடி இடுபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 3.16 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.