Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை…. 4.06 கோடியாக அதிகரிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில்  தமிழகம் முழுவதும் இரண்டாவது வாரமாக கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் இடங்களில் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காலை 11 மணி நிலவரப்படி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 4.06 கோடியை எட்டியுள்ளது. நேற்று வரை 3.96 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய நிலையில் இன்று ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Categories

Tech |