Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி தடுப்பூசி…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவருடைய நலத்திட்டங்கள் அனைத்துமே மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கும் வகையில் உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது.

அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்ற நிலையில், தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும், திமுக ஆட்சிக்கு வந்தபின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |