தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலே சென்னையில் தான் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 303ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை நேற்று தகவல் அளித்திருந்த நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.