தமிழகத்தில் 12 மற்றும் 13ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், நவம்பர் 12, 13ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும். தீபாவளி அன்று பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.