தமிழகத்தில் சமையல் எண்ணெய்யைப் பேக்கிங் செய்யாமல் சில்லறை விற்பனையில் விற்கக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உலக மக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவையான உணவுக்கு மிகவும் முக்கியம் சமையல் எண்ணெய். அவ்வாறு பயன்படுத்தும் சமையல் எண்ணெயை நல்லதாக உபயோகிக்க வேண்டும். ஆனால் மக்கள் அதனை கவனிப்பதில்லை. இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் பேட்டின் செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணைகளை விற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் எண்ணையை பாக்கெட்டில் அடைக்காமல் விற்கக் கூடாது என 2011-இல் உணவு பாதுகாப்பு சட்டம் கூறியது. சட்டப்படி தடை இருந்தும் பாக்கெட்டில் அடைக்காமல் சமையல் எண்ணெய் விற்க அனுமதித்தது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு சமையல் எண்ணெய் விற்பனையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.