தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படுக்கையை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனாவால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
கடந்த 20 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாகத்தான் உள்ளது. தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் ஏதும் விளக்கிக் கொள்ளப்படவில்லை. எந்த வகை கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரியாது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் Blood Art நிறுவனங்களுக்கு உடனே தடை விதிக்கப்படுவதாகவும் இதனை மீறி அந்த நிறுவனங்களை நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.