தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று காலை மேற்கொள்ள இருப்பதாக காலை 9 மணி முதல் 4 மணி வரை மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கண்ணாடிப்புத்தூர், நீலம்பூர், கணியூர், காரத்தொழுவு, தாமரைப்பாடி, நாட்டுக்கல்பாளையம், உடையார்பாளையம், சோழமாதேவி, வேடப்பட்டி, ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புத்தூர் மற்றும் வஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அதேபோன்று சிவகங்கை மாவட்டம் இடையமேலூா் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இடையமேலூா், சக்கந்தி, புதுப்பட்டி, காந்திநகா், கோமாளிப்பட்டி, கூவாணிப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.