திருப்பூர்
தாராபுரம் கோட்டத்தில் செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தாராபுரம் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் வசித்து கொண்டிருக்கும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தளவாய்பட்டணம், செலாம்பாளையம், சென்னாக்கல்பாளையம், ஊத்துப்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், சந்திராபுரம், தேவநல்லூர், நாட்டுக்கல்பாளையம், சிக்கினாபுரம், கள்ளிவலசு, வட்டமலைபுதூர், ரஞ்சிதாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் .
மதுரை
மதுரை திருப்பாலை துணைமின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்தி காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய காலனி, சொக்கிகுளம், சண்முகாநகர், விஜய் நகர், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்.
தேனி
தேவதானப்பட்டி டி. வாடிப்பட்டி, சில்வார்பட்டி, பெருமாள்பட்டி, மஞ்சளார் புஷ்பராணி நகர், சாத்தாகோவில்பட்டி அட்டணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
சென்னை
ஆவடியில் மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஆவடி: சி. டி. எச். ரோடு, காந்தி நகா், கவரபாளையம், பெரியாா் தெரு புழல் கதிா்வேடு முழுவதும், சீனிவாசா நகா், ஜே. பி. நகா், புத்தகரம், சூரபேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மீனாட்சிபுரம் தெங்கம்புதூர் உப மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த பகுதிகளுக்கு உட்பட்ட நாகர்கோவில் வடிவீஸ்வரம் , கோட்டார் , கணேசபுரம் , இடலாக்குடி , ஒழுகினசேரி , ராஜபாதை , கரியமாணிக்கபுரம் , செட்டிகுளொம் சந்திப்பு , ராமன்புதூர் சந்திப்பு , வெள்ளாடிச்சி விளை மற்றும் தெங்கம் புதூர் , பறக்கை , ஐ. எஸ். இ. டி. மேலமணக் குடி , முகிலன் விளை , மணிக்கட்டிபொட்டல் , ஒசர விளை , காட்டு விளை , புதூர் , ஈத்தாமொழி , தர்மபுரம் , பொட்டல் , வெள்ளாளன் விளை , மேல கிருஷ்ணன் புதூர் , பள்ளம் , பிள்ளையார்புரம் , புத்தளம் , புத்தன் துறை , முருங்கை விளை , பண்ணையூர் , தெக்குறிச்சி , அழிக்கால் , பிள்ளைத் தோப்பு , தர்மபுரம் , பழவிளை , தாராவிளை , அருந்தகன் விளை , ராஜாக்கமங்கலம் துறை ஆகிய பகுதிகளுக்கு அன் றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது.