தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பயணிகள் வரத்து குறைந்ததால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் சீரமைப்பு வேலைகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் புறப்படும் ரயில்கள் வரும் செப்டம்பர் மாதம் வரை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. இங்கு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ரயில் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.