தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி: கல்லாமொழி உபமின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற நடக்கிறது. அதனால் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், மணப்பாடு, குலசேகரன்பட்டிணம், சிறுநாடார் குடியிருப்பு மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது.
கடலூர்: செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் 22 கிவோ வானவில் மின்னூட்டி பகுதியில் கடலூர் – விருத்தாசலம் குறுக்குரோட்டில் புதன்கிழமை புதைவட பணிக்காக விரிவாக்க பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்ணாரப்பேட்டை பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
கோவை: அவினாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு வடக்கு ரதவீதிகள், அவினாசிகைகாட்டி புதூர், சக்திநகர், எஸ்.பி. அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
கன்னியாகுமரி: குழித்துறை துணை மின் நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருவள்ளுர்: மாதவரம் பகுதியில் உள்ள செங்குன்றம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி ஒரு மதியம் 2 மணி வரை செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை போடப்படும் பொன்னேரி பகுதியில் உள்ள சோத்து பெரும்பேடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு காரணமாக காலை 9 மணி ஒரு மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும். மேலூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் மின்தடை போடப்படும்
பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தரமணி-பெருங்குடி பகுதி: இராமப்பா நகர், சர்ச் பிரதான சாலை, அப்போலோ மருத்துமனை, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் – கடப்பேரி பகுதி: துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, காமாட்சி நகர், பாரதிதாசன் தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி-செங்குன்றம் பகுதி: விவேக்பார அவென்யூ, ஜோதி நகர், மகாலட்சுமி நகர், வடிவேல் நகர் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
சோத்துபெரும்பேடு பகுதி: அலிமேடு, பள்ளசூரப்பேடு, மேட்டுசூரப்பேடு, மேட்டுகாலனி மற்றும் வட்டிகாரன்பாளையம்.
கொளத்தூர் பகுதி: ராஜஸ் அபார்ட்மெண்ட், சாந்திகாலனி, செந்தில் அவென்யூ, காந்திமதி தெரு, சீனிவாசன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.