Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அதோடு, நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |