தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனுடைய தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில முழுவதும் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என கணித்துள்ளது. ஆந்திர மாநிலம் அருகே வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது..இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளது.