தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை எதிரொலியாக திருவள்ளூர்,காஞ்சி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை வெளுத்து வாங்கும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.