Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் திருவிழாக்களின் போது மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம்.அதன்படி ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் அக்டோபர் மாதம் விழா தொடங்கிய நிலையில் தொடர்ந்து 30 நாட்கள் இதற்கான வழிபாடுகள் மற்றும் நடைமுறைகள் நடைபெற்று வருகிறது.

அதற்காக காவிரியில் பக்தர்கள் அனைவரும் நீராடி வழிபடும் கடை முக தீர்த்தவாரி வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் நவம்பர் 16ஆம் தேதி அன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 19ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |