தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் அமைய உள்ள சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தருகிறார். இதன் காரணமாக நாளை அதாவது நவம்பர் 28ஆம் தேதி காலை சென்னையிலிருந்து விமான மூலம் புறப்பட்டு திருச்சி வர உள்ளார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெரம்பலூர் செல்ல உள்ளார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களும் ட்ரோன்கள் பறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.