Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில்…. இரவு நேர ஊரடங்கு…? – வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது  குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வதாக தகவல் கசிந்துள்ளது.

Categories

Tech |